செந்தமிழ்சிற்பிகள்

அரசன் சண்முகனார் (1868-1915)

அரசன் சண்முகனார் (1868-1915)

அரசன் சண்முகனார் 20 ஆம் நூற்றாண்டு தமிழ் உரையாசிரியர், பெரும் புலவர் ஆவார். ஆங்கிலப் பாடத்துக்கு பாடநேரத்தைக் கூட்டியும், தமிழ்ப் பாட நேரத்தைக் குறைத்தும் தலைமை ஆசிரியர் ஆணைக் கொண்டு வந்தபோது அதனை எதிர்த்துப் பள்ளியிலிருந்து வெளியேறினார். மதுரை சேதுபதிப் பள்ளியில் பாரதியார் தமிழாசிரியராக வேலையில் சேருவதற்காக தாம் விடுப்புப் போட்டு அவர் இடத்தில் பாரதியார் பணிசெய்ய வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தார். இவர் சிதம்பர விநாயக மாலை, இன்னிசை இருநூறு, மதுரை மீனாட்சி அம்மன் சந்தத் திருவடிமாலை, நவமணிக் காரிகை நிகண்டு, திருக்குறள் ஆராய்ச்சி உள்ளிட்ட பல நூல்களை எழுதி உள்ளார். இவர் தொல்காப்பியப்பாயிர விருத்தி, திருக்குறள் உரை விளக்கம் ஆகிய உரை ஆராய்ச்சி நூல்களையும் இயற்றி உள்ளார்.